வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை

இயற்கை பூச்சிக் கொல்லிகள்

0
358

தேவையான பொருட்கள்

*நூறு லீட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு

*நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ

*தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்

*சோப்பு – 200 கிராம்

*மெல்லிய துணி – வடிகட்டுவதற்காக

செய்முறை

*தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).

*நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.

*இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

*மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.

*இரண்டு அடுக்கு மெல்லிய துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லீட்டராக ஆக்க வேண்டும்.

*இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)

*பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here