பழங்களில் மருந்து கண்டுபிடிக்கும் புதிய முயற்சி

0
142

”பழங்களில், உயிரிதொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மருந்தின் மூலக்கூறுகளை, உருவாக்கும் ஆய்வு தற்போது நடந்துவருகிறது.

இது வெற்றியடைந்தால், மருந்து, மாத்திரைகளுக்கு பதில், பழங்கள் மூலம் தீர்வு பெற முடியும்,” என, தேசிய கருத்தரங்கில், மலேசிய பேராசிரியர் பேசினார்.

சேலம், பெரியார் பல்கலை, உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில், ‘தாவர உயிர் தொழில்நுட்பவியலின் புதிய பரிமாணங்கள்’ தலைப்பில், தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது.

பல்கலை டீன் கிருஷ்ணகுமார் தொடங்கி வைத்து, ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பை வெளியிட்டார்.

மலேசிய பல்கலை, உயிர் வேதியியல் துறை பேராசிரியர் சுப்ரமணியம் பேசியதாவது: மருந்து தயாரிப்பு, நானோ மருந்து தயாரிப்பு ஆகியவற்றை, வேளாண்ம துறையில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம், சுற்றுச்சூழல் கிடைக்க, பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஊட்டச்சத்து மிகுந்துள்ள பழங்களில், உயிரிதொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மருந்தின் மூலக்கூறுகளை, உருவாக்கும் ஆய்வு தற்போது நடந்து வருகிறது.

இது வெற்றியடைந்தால், மருந்து மாத்திரைகளுக்கு பதில், பழங்கள் மூலம் தீர்வு பெற முடியும். இதன்மூலம் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்க முடியும்.

இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புற்றுநோய், பக்கவாத நோய், அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆய்வுகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்க அமைப்பாளர் இளங்கோவன், ஏற்காடு மத்திய சுற்றுச்சூழல் ஆய்வு மைய விஞ்ஞானி கலியமூர்த்தி, உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here