முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா?

0
188

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம்.

சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அது சருமத்தில் வளரும் முடியை நீக்குகிறதோ இல்லையோ, முடியின் நிறத்தை மங்க வைக்கும். ஆனால் இந்த முறையை தொடர்ந்து செய்தால், நாளடைவில் முடி வளராமல் இருக்கும்.

அக்காலத்தில் மக்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதனால் தான், அவர்களது சருமத்தில் முடிகளின்றி, சருமம் பட்டுப்போன்று இருந்தது. எனவே தினமும் இதனை தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும்.

பாணை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள முடி நீங்குவதோடு, முகம் பொலிவோடு இருக்கும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here