இயற்கை தரும் இனிய வாழ்வு

0
208

தவறான வாழ்வியல் முறையால் தான் நோய்கள் உருவாகின்றன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடும்.

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடை அல்ல. நோயை உருவாக்கும் முக்கிய காரணி கொசுவல்ல. மாறாக, தவறான உணவு மற்றும் தவறான வாழ்வியல் முறையால் தான் நோய்கள் உருவாகின்றன.

ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் விவசாயத்தால் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள், ஜங் உணவுகள், பட்டை தீட்டிய அரிசி, மின்சார அடுப்புகள், குளிர்பானங்கள், மைதா உணவு பொருட்கள் போன்ற பல்வேறு காரணிகள் நோய்களை பரிசளிக்கின்றன.

அதே போல இவை தரும் நோய்களை குணமாக்கும் இடங்கள் மருந்தோ, மருத்துவமனையோ கிடையாது.

நோய்களில் இருந்து உயிர் பிழைக்க ஒரே வழி. இயற்கைக்கும், இயற்கை விவசாயத்துக்கும் திரும்புவது தான்.

இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடும்.

நாட்டு பசும் பால், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, கரும்பு சர்க்கரை, கல் உப்பு, மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய், நாட்டுக்கோழி, நாட்டு கோழி முட்டை, வடித்த சோறு, மண் பானை தண்ணீர், பழச்சாறு,சிறுதானியங்கள் போன்ற பழையகாலத்து உணவுமுறை, பழக்க, வழக்கங்கள் தான் நோயற்ற வாழ்வுக்கு வழிகோலும்.

இவை தான் நோய்களை குணமாக்கும் இடங்கள். இயற்கை தரும் வாழ்வு தான் இனிய வாழ்வாக இருக்க முடியும். எனவே, இயற்கைக்கு திரும்புவோம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here