விதிகளை மீறி வைத்த விளம்பர பதாதைகளை அகற்ற உத்தரவு

0
55

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாதைகளை அகற்ற சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

வீதி விதிகளை மீறி போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படுவதை கண்டித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்து புகார் மனுக்கள் அளித்து வருகிறார்.

இவற்றின் அடிப்படையில் சென்னை உயர் நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து(01.02.2018) இன்று விசாரித்தது.

இவ்வாறு வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றாமல் காவல் துறை என்ன செய்கிறது என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், ஏற்கனவே உள்ள விளம்பர பதாதைகளை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது? என்றும் கேட்டுள்ளனர்.

எனவே, “இந்த பதாதைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.” என கூறியள்ளனர்.

“இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி, காவல்துறை மற்றும் தமிழக அரசு 05ஆம் திதகதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here