தமிழக விவசாயிகளின் 100 நாள் விழிப்புணர்வு பயணம் ஆரம்பம்!

0
78

தமிழக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் 100 நாள் விழிப்புணர்வு பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நேற்று(01) ஆரம்பமானது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் இதனை ஒழுங்கு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் நதி இணைப்பு என்பன இவர்களது கோரிக்கை ஆகும்.

இந்த விழிப்புணர்வு பயணத்தின் நூறாவது நாள் சென்னை கோட்டையில் நிறைவடையும்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை கையளிப்பதற்கும் ஏற்பாட்டாளர்கள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here