இளம்பெண் கழுத்தறுத்து கொலை

வள்ளியை கழுத்தறுத்து கொன்றுள்ளார்

0
85

குடியாத்தம்: வேலூர் மாவட்ட சின்னாப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. (வயது 33) இவர் முச்சக்கர வண்டி சாரதி. ஆனால் நோய் காரணமாக விவசாயம் செய்து வந்தார்.

பிரபுவின் மனைவி வள்ளி (வயது 29). இவர்களுக்கு துளசி (9), திலீப் (7) என்ற பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அரச பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் 02 மாதங்களுக்கு முன் பிரபுவிற்கு தலையில் கட்டி இருந்ததால் இறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் இவர்களுக்கிடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்ட வண்ணம் இருந்தன.

தினமும் இவர்கள் சண்டை பிடிப்பதால் பிள்ளைகள் இருவரும் பாட்டி வீட்டிற்கு சென்று நித்திரை கொள்வார்கள். மறுநாள் காலை வருவார்கள்.

இதே போன்று பிள்ளைகள் பாட்டி வீட்டிற்கு நேற்றிரவு சென்று விட்டார்கள். இரவு வழக்கம் போல் சண்டை இடம்பெற்றுள்ளது.

சண்டையில் பிரபு தன் மனைவியான வள்ளியை கழுத்தறுத்து கொன்றுள்ளார். அதனையடுத்து தலையில் கல்லையும் போட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இன்று காலை பிள்ளைகள் வந்த போது தாயின் நிலையைக்கண்டு கதறி அழுதனர். இவர்களது அழு குரலில் அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டுனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறையினர் பிரபுவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here