கர்ப்பிணிப்பெண்ணுக்கு பொலிஸாரால் ஏற்பட்ட நிலை!

படுகாயமடைந்த ராஜா தீவிர சிகிச்சைப்பிரிவில்

0
44

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில் பணிபுரிகின்றார்.

இவரது மனைவி பெயர் உஷா. இவர்கள் இருவரும் திருமணமாகி 05 வருடங்கள் கடந்த நிலையிலும் பிள்ளைகள் இல்லை. இந்நிலையில் உஷா கர்ப்பம் தரித்தார்.

கணவன், மனைவி இருவரும் நேற்று (07) மோட்டார் சைக்கிளில் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் இன்ஸ்பெக்டர் காமராஜ் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாது சென்ற ராஜா இதனை அவதானித்தார். பொலிஸார் இவரை மறித்த போது நிற்காமல் சென்றார்.

இதனால் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் ஆத்திரமடைந்து அவரை ஜீப்பில் பின் தொடர்ந்தார்.

பின் தொடர்ந்த பொலிஸ் ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதனால் ராஸா மற்றும் உஷா இருவரும் வீதியில் விழுந்தனர்.

கர்பிணியான உஷா துடிதுடித்து சம்பவ இடத்திலே இறந்தார். படுகாயமடைந்த ராஜா தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸ்படை வந்து இவர்களது போராட்டத்தை கலைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here