ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 7 பேர் பலி!

மக்கள் கூட்டத்து இலக்கு

0
22
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (09) இடம்பெற்ற குறித்த தாக்குதலில் மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காபூலிலுள்ள சோதனைச் சாவடி ஒன்றிற்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரி யொருவரும் அடங்குகின்றார்.
1995ஆம் ஆண்டு தலிபான் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த ‘ஹசரா’ அரசியல் தலைவரான அப்துல் அலி மஸாரியின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here