மகளிர் ஹொக்கி போட்டியில் இந்திய அணி!

0
39
தென் கொரியாவில் இடம்பெறும் மகளிர் ஹொக்கி போட்டியில் இந்திய அணி ஐந்து தொடரில் பங்குபற்றுகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 1:0 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் 3:2 என்ற கோல் கணக்கிலும் வென்று 2:0 என முன்னிலை பெற்றது.
இதனிடையே நடைபெற்று முடிந்த தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 26 வயதான ரீது ராணி இந்திய மகளிர் அணிக்கு தலமை வகிக்கிறார்.
இப்போட்டி இவருக்கு 200வது சர்வதேசப் போட்டியாக அமைந்துள்ளது.
இதேபோன்று மோனிகாவிற்கு 100வது போட்டியாக இத்தொடர் அமைந்துள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஒரிசாவைச் சேர்ந்த லிலிமா மின்சு வுக்கு இத்தொடர் 100வது சர்வதேசப் போட்டியாககும்.
கடந்த 2011ல் இடம்பெற்ற சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஆரம்பித்த 23 வயதாகும் மின்ஸ், 2016 ல் ‘ரியோ ஒலிம்பிக்’ போட்டியிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here