சர்ச்சையை கிளப்பியுள்ள சசிகலாவிற்கான விசேட சலுகைகள்!

0
55
சசிகலாவிற்கு சிறையில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக மீண்டும் சர்ச்சைகள் கிம்பியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள நிலையில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
சசிகலா அங்கு சிறை உடையை தவிர்த்து சாதாரண உடையில் இருந்தமை மற்றும் அவரது அறையில் வேறு பல உடைகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தேசிய மகளிர் ஆணைய தலைவி நேற்று முன்தினம்(10) ஆய்வு நடத்தியுள்ளார்.
இதேவேளை, சசிகலாவிடம் இலஞ்சம் பெற்று அவருக்கு சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here