சினிமாவில் ஆணாதிக்கமே அதிகம் – விரக்தியடைந்த நடிகை..!

0
51
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தபோதும், இன்னும் முன்னணி இடத்தை பெறாதவர் நடிகை ‘ஆன்ட்ரியா”.
சினிமாவில் ஆணாதிக்கமே காணப்படுவதாக ஆன்ட்ரியா விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு பாராட்டும், புகழும் கிடைத்தது.
ஆனால் அதிகமான படவாய்புகள் எனக்கு கிடைக்கவில்லை.
நயன்தாரா ஆரம்பத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலமே நட்சத்திரம் ஆனார்.
மேலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்காவிடின் நயன்தாரா போன்ற நடிகைகள்  எவர் கண்ணுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
யாருடன் நடிக்கின்றார் என்பதை மட்டும் வைத்து ஒரு நடிகையின் திறமையை மதிப்பிடக்கூடாது.
ஆணாதிக்கம் மட்டுமே சினிமாவில் காணப்படுகின்றதால் நடிகைகளுக்கு குறைந்தபட்ச முக்கியத்துவமே வழங்கப்படுகின்றது.
தற்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் யாவுமே எனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் கதாபாத்திரங்களாகவே அமைந்துள்ளன.
தினமும் படப்பிடிப்புகளின் போது புதுப்புது விஷயங்களை நான் கற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை ‘ஆன்ட்ரியா” விழாவில் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here