மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

தொடர்ந்தும் பெய்து வரும் மழை

0
53
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்திய சுகாதார அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ் றஜீப்ஹான் தெரிவித்தார்.
இங்கு ஜனவரி தொடக்கம் மார்ச் (12) திகதி வரையிலான காலப்பகுதியில் ஐம்பத்தொரு (51) டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக கோறளைப்பற்று பிரதேசத்தில் உள்ள அரச திணைக்களங்கள், வணக்கஸ்த்தலங்கள், மற்றும் வீடுகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதே வேளை டெங்கு நுளம்பை கட்டப்படுத்துவதற்காக காலை மற்றும் மாலை வேலைகளில் புகையூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here