முஸ்லிம்கள் தம்மீதான விமர்சனங்களை சாதகமாக பார்க்க வேண்டும்…!

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

0
52

இலங்கை முஸ்லிம் சமூகம் விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை ஜம் ய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அதுவே சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள உதவும் எனவும் உலமா சபையின் ஏறாவூர் கிளைத் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம். நிராஸ் இன்று(13) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்று அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது எறாவூரிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒருதொகுதி உணவுப்பொருட்களும் பள்ளிவாசல் நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் தொடர்பில் பள்ளி வாசல் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here