உலகை விட்டு பிரிந்தார் நகைச்சுவை நடிகர் செர் கென் டொட்

0
21

பிரித்தானியாவில் மிகவும் பிரபல்யமாகத் திகழ்ந்த நகைச்சுவை நடிகர் செர் கென் டொட் (உலகை விட்டு பிரிந்தார் நகைச்சுவை நடிகர் செர் கென் டொட் ), தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் 6 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த இவர், அண்மையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், தனது வீட்டில் (11) இவர் காலமாகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1954ஆம் ஆண்டு முதல் நகைச்சுவை நடிகராக இருந்துவரும் இவரது சிறந்த படைப்பாக  Diddy Menகருதப்படுகின்றது.

மேலும், மூன்றரை மணித்தியாலங்களில் ஆயிரத்து 500 நகைச்சுவைக் கதைகளைக் கூறி, 1960ஆம் ஆண்டு அவர் கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here