சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம்!

0
38

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்ட முடியும் என்கிறார் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

இதற்காக புதிய சட்ட விதிகளை அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன.

இது இலங்கையில் மாத்திரமன்றி உலகம் முழுவதும்; விரிவடைந்துள்ள பாரிய பிரச்சினையாகும்.

இது விடயத்தில் நாட்டில் இருக்கும் சட்டத்தின் கீழ் ஒழுங்கற்ற வகையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

தேவைப்படின் தேர்தல் காலங்களில் மேலதிக சட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.

அதேவேளை வலைத்தளங்கள் ஊடாக போலியான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பிரசாரங்கள் தொடர்பிலும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் சம்பிக்க கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here