தமிழ் நடிகருக்கு லண்டனில் சிலையா…!!!!

0
36
லண்டனில் தமிழ் நடிகர் ஒருவருக்கு சிலை நிறுவப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம்தான் ‘பாகுபலி”.
இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படம், தென்னிந்தியாவில் அளவில்  இதுவரையில் காணாத வெற்றியையும், வசூலினையும் கண்டது.
இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாகுபலியில் கட்டப்பாவாக நடித்த ‘சத்யராஜ்கே” லண்டனில் சிலை நிறுவப்படவுள்ளது.
ஏற்கனவே ‘பாகுபலி” கதாபாத்திரத்திற்காக ‘பிரபாஸிற்கு” இதுபோன்ற சிலை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பாகுபலியின் ‘கட்டப்பா” கதாபாத்திரத்துக்காக ‘சத்யராஜ்”க்கு  இத்தகைய அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது..
லண்டன் ‘மேடம் டுசாட்ஸ்” அருங்காட்சியகத்தில் ‘சத்யராஜின்”  ‘கட்டப்பா” கதாபாத்திரத்துக்கான ‘மெழுகுச் சிலை” ஒன்று வெகுவிரைவில் நிறுவப்படவுள்ளது.
இத்தகைய தகவல்களையடுத்து  நடிகர் சத்யராஜிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here