படுதோல்வியை தழுவிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணி…!!!

0
35
அவுஸ்திரேலிய- இந்திய மகளிர் அணிக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
‘வடோதரா”  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
50 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மட்டுமே இந்திய அணி பெற்றுக்கொண்டது.
‘பூஜா வஸ்த்ரகார்” 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்ட அதேவேளை  ‘ஜீஸ் ஜோனாசின்” 4 விக்கெட்டுக்ககளை வீழ்த்தியுள்ளார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திதேலிய அணி 201 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது.
இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 32.1 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.
அணியின்  சார்பில் 100 ஓட்டங்களை ஆட்டமிழக்காது ‘போல்டோன்” பெற்றுக்கொடுத்ததோடு ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இறுதியில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை வெற்றி கொண்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here