பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலி!

0
22
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுகம்போ மாவட்டத்திலுள்ள அம்ஹராவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 28 ஆண்களும் 10 பெண்களுமாக 38 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலை ஒன்றில்
அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரியவருகின்றது.
விபத்துத் தொடர்பான விசாரணையை எத்தியோப்பிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here