400 மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கப்படும் தடுப்பணை!

0
33

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் என வடமாகாண நீர்பாசன பணிப்பாளர் பிறேம்குமார் தெரிவித்தார்.

வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நீர்பாசன பணிப்பாளர் கூறும் போது,

நீர்ப்பாசன வேலைத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதுடன், நன்நீர் வளத்தை பெருக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

இத்திட்டமானது மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுத்து வரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் கருத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது.

இத்திட்டமானது 400 மில்லியன் ரூபா செலவில் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது.

நன்னீருடன் உவர்நீர் கலக்கும் அபாயத்தை அடுத்து துருப்பிடிக்காத உலோகத்தினாலான கதவு இடப்பட்டு இவ்வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here