பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மர்மப்பொதி!

0
16

பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சந்தேகத்திற்கிடமான பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த உறுப்பினர்கள் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

தொழிற்கட்சி உறுப்பினர்களான ருசனாரா அலி, மொஹமட் யாசின், ரூபா ஹக் மற்றும் அஃப்சல் கான் ஆகியோருக்கே இப்பொதிகள் கிடைத்துள்ளன.

‘முஸ்லிமை தண்டிக்கவும்’ எனும் தலைப்பிலான கடிதம் ஒன்றும் அப்பொதியுடன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அதேவேளை மற்றுமொரு உறுப்பினரின் பொதியிலிருந்து திரவம் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here