ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பேஸ்புக் தூண்டுகிறது!

0
16

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி யங்ஹீ லீ தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மியன்மார் அரசாங்கமும், கடின தேசியவாதிகளும் முஸ்லிம் விரோத பிரசாரங்களை மேற்கொள்ளவும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை தூண்டவும் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் இனப்படுகொலைக்கான அடையாளம் என்றும் லீ தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தேசியவாதிகள் நாட்டில் ஒரு அரசியல் சக்தியாக வெளிப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பௌத்த பெரும்பான்மையை கொண்ட மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகள் முஸ்லிம்களை பெரிதும் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here