வட கொரியா விடயத்தில் பல படிமுறைகள் தேவை என்கிறார் டில்லர்சன்

0
24

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது (12) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அது தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல்களில் அமெரிக்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல் குழுவில் இடம்பெற்றுள்ள டில்லர்சன், எந்தவொரு நடவடிக்கையையும் தெளிவுபடுத்தவில்லை. அத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு சாத்தியமான இடம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கவில்லை.

எனினும் இவை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாகவும் இரு தரப்பினருக்கு இடையிலான சந்திப்பும் அமைதியாக நடைபெறுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நைஜீரிய அரசாங்கத்துக்கு பயிற்சி, ஆதரவு, ஆலோசனைகளை வழங்குவற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here