ருசியான கிராமத்து வெந்தய குழம்பு செய்முறை!!!

0
799

தேவையான பொருட்கள்

 

சுண்டைக்காய் வற்றல் – 3

சின்ன வெங்காயம் – 15

வெந்தயம் – 3 டீஸ்பூன்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

பெரிய தக்காளி – 01

நல்லெண்ணெய் – தேவையான அளவு

மிளகு – 6

வெல்லம் – சிறிது

கறிவேப்பிலை – ஒரு கொத்து.

தனியா – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 7

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

 

செய்முறை

 

பாத்திரத்தில் தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுக்கவும்.

ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

மீதியுள்ள நல்லெண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி கடுகு மீதியுள்ள வெந்தயம் கறிவேப்பிலை, தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

மேலும் இதனுடன் சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.

ருசியான கிராமத்து வெந்தய குழம்பு தயார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here