உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஜெயே ரிச்சர்ட்சன் நீக்கம்.!

0
168

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30ம் திகதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி ஆரோன் பிஞ்ச் தலைமையில் பங்கேற்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்த 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜெயே ரிச்சர்ட்சனின் தோள்பட்டை காயம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை.

அவர் இன்னும் உடல் தகுதியை எட்டாததால் பந்து வீச எடுத்த முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து தேர்வாளர்களுடன் கலந்து ஆலோசித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜெயே ரிச்சர்ட்சனை நீக்கி இருக்கிறது.

அவருக்கு பதிலாக 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் கேன் வில்லியம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here