யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.!

0
141

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது,

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல் 23ம் திகதி வர உள்ள வெற்றிச்செய்தி இப்போது கேட்கிறது.

தேர்தல் முடிவுக்குப்பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மோடி ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை.

இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது இதற்கு காரணம் இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.

மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டுமென்றால் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

எனவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் ஓட்டு மூலம் பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here