இந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.!

0
262

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது.

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள், லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது.

உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள், அதனை வெள்ளிக் கிழமை வாங்குவது நல்லது.

இதனடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது.

எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.

லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளாங்கும் உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள்.

ஆகையால் கல் உப்பாக வாங்கி வைப்பது நல்லது.

வீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு  8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.

இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர செல்வச் செழிப்பு அதிகரிக்கும் கல்  உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.

எந்த வீட்டினுள் நுழைந்ததும் துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ நறுமணம் கமழுகிறதோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here