குபேர முத்திரையால் கிடைக்கும் பலன்கள்.!

0
66

பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து நாம் நினைத்ததை சாதிக்க உதவும் ஒரு முத்திரைதான் குபேர முத்திரை.

எவர் ஒருவர் குபேர முத்திரையில் தியானம் இருக்கிறாரோ அவரின் வாழ்வு செழிப்பாக இருக்கும்.

துன்பங்கள் பறந்தோடும், கோடீஸ்வர யோகம் உண்டாகும், பஞ்ச பூதங்களின் அருள் கிடைக்கும்.

அதனாலேயே இந்த முத்திரை குபேர முத்திரை என்ற பெயர் பெற்றது,

குபேர முத்திரை

பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை வேலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி பூஜை அறையில் சப்பணமிட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து கொண்டு கண்களை மென்மையாக மூடு வேண்டும்.

பிறகு கட்டை விரலின் நுனிப்பதுதியில், ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலில் நுனியை சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியை மடக்கி உள்ளகையில் அழுத்த வேண்டும்.

இந்த நிலையில் நமது உள்ளங்கையானது கீழ்நோக்கி இல்லாமல் மேல் நோக்கி இருக்க  வேண்டும், இதையே நாம் குபேர முத்திரை என்கிறோம்.

இந்த முத்திரையை நாம் செய்ய துவங்கும் முன்பு நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானித்து அதை இறைவனிடம் வேண்டியவாறு மனதை ஒருமுகப்படுத்தி இந்த முத்திரையில் இருக்க வேண்டும்.

நம்மால் தொடர்ந்து எவ்வளவு நேரம் இந்த முத்திரையில் இருக்க முடியுமோ  அவ்வளவு நேரம் இருக்கலாம்.

இந்த முத்திரையில் ஒருவர் இருக்கும் சமயத்தில் அவர் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் முழுமையாக அழிக்கப்படும்.

ஆகையால் நேர்மறை திறன் பெருகி அது ஆற்றலாக அவருள் வெளிப்பட துவங்கும்.

மேலும் நமது உடலில் உள்ள விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள் இயங்கத் தொடங்கும்.

அதன் மூலம் நமது மூளைக்கு ஒரு வித ஆற்றல் கிடைக்கும் அதோடு நமது ஆழ் மனதில் ஒரு வித அமைதி நிலை கொள்ளும் இதனால் நமது உணர்வுகளை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

செல்வம் சேர்ப்பதற்கு மட்டும் இல்லமால், நாம் எதை நினைத்தாலும் அதை அடைவதற்கு வழி செய்கிறது இந்த ஆசனம் ஆகையால் அனைவரும் இதை தொடர்ந்து முயற்சித்து பயன் பெறலாம்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here