வியர்வை நாற்றத்தை விரட்டும் இயற்கை வழிகள்.!

0
106

கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று, கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து  வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.

இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது.

நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.

தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும், அதில் கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும் இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.

இதேபோல் குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.

குளிக்கும் தண்ணீரில் டெட்டால் போட்டு தொடர்ந்து குளித்து வரும்போது வியர்வை நாற்றம் போய்விடும்.

குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும், காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை  நாற்றத்தை தடுக்க முடியும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள், அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு, பனை நுங்கு, பதநீர் பருகுங்கள்.

வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here