இலவங்கப்பட்டையில் மறைந்துள்ள அற்புத மருத்துவ பயன்கள்.!

0
63

இலவங்கப்பட்டையில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது மேலும் இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை உள்ளது.

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்கி, பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும் இதனை தண்ணீரில் சேர்க்கலாம் அப்டியே பேஸ்ட் செய்து சாப்பிடலாம்

தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும்.

இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

வயது ஆகும்போது நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன, தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.

மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம், தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு  குறைந்திடும்.

தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும், சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.

ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.

வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும், இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here