பிரபல பாடகி இயக்குனர் மீது பாலியல் புகார்.!

0
57

நடிகைகளும், பெண் இயக்குனர்களும் மீ டூவில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள், இதில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள்.

இந் நிலையில் பிரபல பாடகி பிரணவி, இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தற்போது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இவர் தெலுங்கு படங்களில் அதிக பாடல்கள் பாடியுள்ளார், 2016 ல் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன், அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்தார்.

ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார் அங்கு சென்றதும் படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவேன் என்று கூறினார், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்து இருக்கிறேன் என்று கூறினேன்.

ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் படுக்கைக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தார்.

எனக்கு கோபம் வந்தது, அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன் என கூறியுள்ளார்.

பாடகி பிரணவியின் இப் புகார் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here