வாரிசுகள் என்பதால் பெரிய நடிகர்-நடிகைகள் ஆகி விட முடியாது.!

0
38

தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில்,

சினிமா பின்னணி உள்ள பிரபலங்களின் வாரிசுகள்தான் திரைப்படத்துறையில் முன்னேறுவார்கள் என்று பரவலான கருத்து உள்ளது.

சினிமாவுக்கு வாரிசுகள் அதிகமாக வருகிறார்கள், அவர்களுக்குத்தான் பட வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்றும் பேசுகிறார்கள்.

இதை நான் ஏற்க மாட்டேன், வாரிசுகள் என்பதாலேயே பெரிய நடிகர், நடிகைகள் ஆகி விட முடியாது.

முதல் வாய்ப்பு வேண்டுமானால் வரலாம், ஆனால் இதில் நிலைத்து இருப்பதற்கு திறமை வேண்டும்.

அதோடு கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.

உழைத்து வேலை செய்ய வேண்டும், அப்படிப்பட்டவர்கள் மட்டுமே சினிமாவில் நிலைத்து இருக்க முடியும் என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here