தென்கிழக்கு திசையில் சமையலறை அமைப்பது ஏன்??

0
60

தென்கிழக்கு மூலையே அக்னி மூலை ஆகும் பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது.

ஒரு வீட்டிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடத்திற்குக் தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படையும் என்பதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மின் இணைப்பு, மோட்டர் அறை, மின் உற்பத்தி இயந்திர அறை ஆகியனவற்றை அக்னி மூலையில் கிழக்கு மதிலைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.

இயலாவிட்டால் வாயு மூலையில் வடக்கு மதிலைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.

சூரிய வெளிச்சம், காற்று போன்றவற்றை தேவையான அளவு வீட்டிற்குள் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது.

அதையே வாஸ்து பகவான் தன் தலையை ஈசான்ய மூலையிலும் (வடகிழக்கு), கால் பகுதியை கன்னி மூலையிலும் (தென் மேற்கு) வைத்து குறுக்காக படுத்திருப்பதாக கூறி ஒரு வரைமுறைகளை வகுத்து பின்படுத்த அறிவுறுத்தினர்.

தென்கிழக்குத் திசை என்பது கிழக்கும் தெற்கும் இணையும் மூலையே ஆகும், இதனை அக்னி மூலை என்று சொல்வார்கள்.

ஒரு வீட்டின் அக்னி ஆற்றலாக மாறி மற்ற பகுதிகளுக்கு பயனைத் தரும் மூலையும் இதுவே, இதனை ஆக்கினேயம் என்றும் சொல்வார்கள்.

இது நம் வீட்டின் வயிற்று பகுதி ஆகும் 90%-லிருந்து  180%-வரை உள்ளது அக்னி எனப்படும் தென்கிழக்கு திசை ஆகும், சமையறை கிழக்கு பார்த்தவாறு அமைக்க வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here