டோனியை பாராட்டிய டென்டுல்கர்.!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி- ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

0
162

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி மந்தமாக ஆடியதை விமர்சித்த முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர்,

தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி அரைசதம் (56 ரன், 61 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து ஆடிய விதத்தை பாராட்டியுள்ளார்.

தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி- ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

இல்லாவிட்டால் இந்திய அணியால் 268 ரன்களை எட்டியிருக்க முடியாது, அதிலும் கடைசி ஓவரில் டோனி 2 சிக்சர் உட்பட 16 ரன்கள் விளாசியதை மறந்து விடக்கூடாது. 

அவரே 6 பந்துகளையும் எதிர்கொண்டு வலுவாக முடித்து வைத்தது சிறப்பானது என கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here