15 வயது சிறுமியிடம் தோற்றுபோன வீனஸ் வில்லியம்ஸ்.!

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. 

0
108

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. 

இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி வருகிற 14ம் திகதி வரை நடக்கிறது. 

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டனுக்கு சில பாரம்பரியம் உண்டு, போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதில் இன்று  மகளிர் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற வீனஸ் வில்லியம்சும், அமெரிக்காவின் 15 வயது கோரி காபும் மோதினர். 

இதில் முதல் சுற்றிலேயே 6-4,6-4 என்ற நேர் செட்களில் வீனஸை தோற்கடித்து  கோரி காப் வெற்றியை பெற்றார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here