கோவிலுக்கு தங்க நகை அணிந்து செல்ல வேண்டும் என கூறுவது ஏன்??

கோவில் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும். 

0
183

கோவில் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும். 

மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாகும்.

அதன்பின் தான் கோவில் கட்டப்படும், செப்பு தகடுகள் பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக அந்த சிலை மூலம்  வெளிக்கொண்டுவரும்.

எல்லா கோவில்களிலும் மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும் அளவிற்கு கதவுகள் அமைந்திருக்கும்.

அந்த  நேர்மறை அலைகள் ஒருங்கே கிடைக்கும், இதே போல் மூலஸ்தானத்தில் அணையாவிளக்கு ஒன்றும், அதைச் சுற்றி கண்ணாடியும்  இருக்கும். 

எனர்ஜியை பரவ செய்யும், ஒரு நுட்பமான செயல் தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கம்.

வேண்டுதலின் படி மாங்கல்யம், சாவி, பேனா, புதுநகைகள் போன்றவற்றை இங்கு வைத்து எடுத்தால் இந்த உலோகங்கள் அங்குள்ள எனர்ஜியை அப்படியே பற்றிக் கொள்ளும். 

அதனால்தான் கோவிலுக்கு தங்கத்தினால் ஆன நகைகளை அதிகம் அணிந்து போவது நல்லது  எனக் கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here