கங்குலிக்கு ஐ.சி.சி வாழ்த்து.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு நேற்று 47வது வயது பிறந்தது. 

0
68

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு நேற்று 47வது வயது பிறந்தது. 

இதையொட்டி அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வாழ்த்து தெரிவித்துள்ளது. 

ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில்,

பேட்ஸ்மேன், பவுலர், கேப்டன், வர்ணனையாளர், ஒரு மனிதர், பல முகங்கள், கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பதிவில் 

பலருக்கு உத்வேகம் அளிக்கும் உண்மையான தலைவர் தாதாவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி அனுராக் தாகூர், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, இந்திய அணி முன்னாள் கேப்டன் தெண்டுல்கர், முன்னாள் வீரர்கள் ஷேவாக், யுவராஜ்சிங், லட்சுமண், ஹர்பஜன்சிங் உட்பட பலரும் கங்குலிக்கு சமூக வலைதளம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here