கனடா ஓட்டலில் நச்சு வாயு: 46 பேர் மருத்துவமனையில்

கனடா நாட்டின் வின்னிபெக் நகரில் ஓட்டல் ஒன்றில் திடீரென கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு கசிந்துள்ளது.  

0
117

கனடா நாட்டின் வின்னிபெக் நகரில் ஓட்டல் ஒன்றில் திடீரென கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயு கசிந்துள்ளது.  

இதுபற்றிய தகவல் அறிந்து வின்னிபெக் நகர தீ மற்றும் பாராமெடிக் சேவை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உடனடியாக அங்கு சென்றனர்.

அவர்கள் கார்பன் மோனாக்சைடு வாயுவானது, ஓட்டலின் கட்டிடம் முழுவதும் பல்வேறு அளவுகளில் இருந்துள்ளது என கண்டறிந்தனர்.  

இதனை அடுத்து ஓட்டலில் இருந்து 46 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  

இந்நிலையில் அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,  5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர், 26 பேர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here