குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மை.!

முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும், சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் யு சத்து உள்ளது. 

0
133

பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும்.

முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும், சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் யு சத்து உள்ளது. 

சத்து நிறைந்த முதல் உணவு, மலம் எனப்படும் Meconium வெளியேறுவதற்கு சீம்பால் உதவும்.

குழந்தைக்குத் தேவைப்படும் போது உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.

குழந்தைக்கு தேவையான சூட்டில் சுத்தமான பால் கிடைக்கிறது, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது தாய்  சேய் பிணைப்பு ஏற்படுகிறது, தாய்க்கு மனநிறைவு உண்டாகிறது.

தாய்மார்களின் கருத்தடை முறையாகவும் இது பயன்படுகிறது, தாய்ப்பால்கொடுக்கும் தாய்மார்கள் வழக்கமாக கருத்தரிப்பதில்லை.

தாய் சாதாரணமாக ஒரு நாளைக்கு 500-600 மில்லிலிட்டர் பால் சுரக்க முடியும், இது முதல் நான்கு மாதம் வரை குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் உடல் அதிக சதைப்பிடிப்பு ஏற்படமால் உடற்கட்டு பாதுகாக்கப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here