விஜயுடன் இணையும் அர்ஜூன்.!

விஜய் நடிக்கும் பிகில் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன, படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. 

0
117

விஜய் நடிக்கும் பிகில் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன, படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. 

அதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியானது, விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் தயாராகியுள்ளது, அட்லி இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. 

அடுத்து மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். 

இது விஜய்க்கு 64-வது படமாகும், இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 

இதில் கதாநாயகியாக 2 நடிகைகள் நடிக்க உள்ளதாகவும், இதற்காக ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இயக்குனர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இந் நிலையில் விஜய்யுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here