பாரதிராஜாவிற்கு கடும் எதிர்ப்பு: தலைவர் பதவிக்கு 04 பேர் போட்டி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு வரும் 21ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

0
93

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு வரும் 21ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

இயக்குனர்கள் சங்கத்தின் 99-வது பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இயக்குனர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர். 

இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஜூலை 14ம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டது, அதன்பின் ஜூலை 21ம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே பாரதிராஜா திடீரென தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சங்கத்துக்குள் எதிர்ப்புகள் எழுந்தன, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்டோர் இதை விமர்சித்திருந்தனர். 

இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவுக்கு பெரும்பாலும் வராதவர் பாரதிராஜா என விமர்சித்தார்.

அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒதுங்கி இருக்க போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். 

இந் நிலையில் தற்போது இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. 

இயக்குனர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர், 4 முனை போட்டி நிலவுவதால் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here