சினிமாவை அறியாமல் உச்சத்திற்கு வந்தவர் ரஜினி.!

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

0
106

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

இதில் இயக்குனர் வசந்த், நடிகர்கள் பார்த்திபன், ரகுமான், நடிகை சுகாசினி, இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த விழாவில் சுகாசினி பேசுகையில்,

கமல், ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடந்தது. 

அப்போது ரஜினி அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் இருந்து கலாகேந்த்ராவின் காரில் தான் வருவார். 

படப்பிடிப்பு இடைவெளியில் வீட்டுக்கு வெளியே சிகரெட் பிடித்தபடி நிற்பார், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், கொஞ்சம் பயப்படுவார். 

உதவி இயக்குனர் மேலே பார் என்றால் கீழே பார்ப்பார், கேட்டால் கால் அரிக்கிறது என்பார். 

இப்படி சினிமா பற்றி தெரியாமல் வந்த ரஜினி தான் மாபெரும் உச்சத்துக்கு சென்றார். 

இப்படி சினிமா தெரியாதவர்களுக்கு பள்ளியாகவும் கல்லூரி யாகவும் விளங்கியவர் பாலச்சந்தர், அவர் திரைக் கலைஞர்களுக்கு எல்லாவித நவரசங்களையும் கொடுத்தவர் என கூறியுள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here