ஒரே நேரத்தில் தரைவழி, வான்வழி தாக்குதல்.! 20 தலீபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. 

0
63

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. 

தலீபான்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தாலும் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என தலீபான்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். 

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் தலீபான்களுக்கு தக்க பதிலடி தந்து வருகின்றனர்.

இந் நிலையில் குண்டூஸ் மாகாணத்தில் இமாம் சாகிப் மாவட்டத்தின் குர்கான் தாபா பகுதியில் பதுங்கியுள்ள தலீபான்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் படைகள் ஒரே நேரத்தில் தரைவழி தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடத்தின.

இதில் தலீபான்கள் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டன, 20 தலீபான்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் படுகாயமடைந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here