புலிகள் புதைத்த தங்கம்… அகழ்வு நடவடிக்கை தீவிரம்.!

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0
180

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றால் விசேட ஸ்கானர்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டு அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகவிருந்த நிலையில்,

பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக அனைவரும் கைது செய்யபட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குழுவினரின் தகவலுக்கு அமைவாக,

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here