ரயில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்.!

0
140

வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞன் நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில்,

புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம் மோதியுள்ளது. 

இதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை பாதுகாப்பான கடவையாக அமைத்துத்தருமாறு பலரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தரவில்லை.

இதனால் இப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு  விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here