வவுனியாவில் 30வது வீரமக்கள் தின நிகழ்வுகள்.!

0
81

வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (13.07)  காலை 9.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

திருவுருவ படத்திற்கு வீரவணக்கம் இடம்பெற்று  மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது அதனை தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றிருந்தது. 

தமிழீழ மக்கள்  விடுதலை கழகத்தின் உபதலைவரும் நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், பிரதேசசபை உறுப்பினர்களான யோகன், உத்தரியநாதன், நந்தன், ஜெகதீஸ்வரன், குகதாசன், நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தாக சாந்தியும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here