முதலையை கடித்து விழுங்கிய அனகோன்டா.!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்டின் முல்லர் அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். 

0
217

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்டின் முல்லர் அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். 

அப்போது ஆலிவ் வகையைச் சார்ந்த அனகோண்டா ஒன்று ஆற்றுப் பக்கமாக வந்துள்ளது. 

அங்கு முதலை ஒன்று வலம் வந்துக் கொண்டிருந்தது இந்த முதலையை மெதுவாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்த பாம்பு, முதலையை தன் உடலால் முதலில் சுருட்டியுள்ளது.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்றே கொன்றுள்ளது இதனை ஒவ்வொரு நிமிடமும் முல்லர் விடாது புகைப்படம் எடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இந்த அனகோண்டா பாம்பு, மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படும் 2-வது மிகப்பெரிய அனகோண்டா வகையைச் சார்ந்ததாகும். 

பைத்தான் என அழைக்கப்படும் அனகோண்டா பாம்புகளின் வாய்ப்பகுதி, ரப்பர் போன்ற தன்மைக் கொண்டது. 

இந்த பாம்புகளின் மேல் மற்றும் கீழ்த்தாடைகள் தனியாக இருக்கும், இதன் மூலம் அவற்றை விட பெரிய விலங்குகளான மான்கள், முதலைகள் உள்ளிட்டவற்றையும், மனிதர்களையும் உட்கொள்ளும் தன்மையை இலகுவாகப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆலிவ் பைத்தான்கள் 13 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. 

இந்தோனேசியாவில் கடந்த 2017-ல் 23 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் வயிற்றில் இருந்து மனிதர் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here