ஜப்பான் கியூஷூ தீவில் நிலநடுக்கம்.!

ஜப்பானின் கியூஷூ தீவில் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

0
48

ஜப்பானின் கியூஷூ தீவில் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.  

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் ஆகியவற்றை பற்றிய உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here