வவுனியாவின் பல கிராமங்களுக்கு மனோ கணேசன் விஜயம்.!

அமைச்சர் மனோகணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார்.

0
85

அமைச்சர் மனோகணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார்.

இதன்போது தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விஜயத்தின் போது வவுனியா சிவபுரம், கற்பகபுரம், புதிய கற்பகபுரம், பம்பைமடு, மடுக்குளம், கோவில் மோட்டை, ஆச்சிபுரம், ஆனந்தபுரம், தரணிக்குளம், சிதம்பரபுரம், கற்பகபுரம், மதுராநகர், ரம்பாவெட்டி,புதிய வேலவர் சின்னகுளம் ஆகிய கிராமங்களுக்கு சென்று சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தேசிய அமைப்பு செயலாளர் வினாயகமூர்த்தி ஜனகன், வட மாகாண அமைப்பாளர் விமல், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரனிதரன், 

வவுனியா மாவட்ட அமைப்பாளர் நடராஜா, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் தீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here