நேபாள விமான நிலையம் மூடல்??

விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கிய விமானம் 15 மீட்டர் தூரம் சென்று புல்வெளி பகுதியில் பாய்ந்தது.

0
113

நேபாள நாட்டில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையத்துக்கு நேற்று காலை 66 பயணிகளுடன் உள்ளூர் விமானம் ஒன்று வந்தது. 

விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கிய விமானம் 15 மீட்டர் தூரம் சென்று புல்வெளி பகுதியில் பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமானங்கள் புறப்பட்டு செல்வது மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here